தகவல்களை அணுகுவதற்கான நடைமுறைகள்
சட்டம் - 2016 ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டம்
உத்தரவுகள் - 2017 பெப்ரவரி 03 ஆம் திகதி வௌியான இல. 2004/66 உடைய அதிவிஷேட வர்த்தமானிப் பத்திரம்
மேற்குறிப்பிடப்பட்ட சட்டத்தின் கீழ் கிரியெல்ல பிரதேச செயலகம் சார்ந்த தகவல்களை பெறுவதற்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் உத்தியோகத்தரிடம் RTI - 01 என்ற விண்ணப்பத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும்.
தகவல்களை பெறுவதற்கு விண்ணப்பித்தல்.
- தகவல்களை பெற எழுத்துமூல RTI -01 விண்ணப்பம் ,கடிதம் அல்லது வாய்மொழி கோரிக்கை ஒன்றினை தகவல் உத்தியோகத்தரிடம் முன்வைத்து அக்கோரிக்கை முன்வைக்கப்பட்டதிற்கு சான்றாக அவரிடமிருந்து கடிதமொன்றினைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
- உங்கள் கோரிக்கையின்படி தகவல்களை வழங்க முடியுமா என்பது பற்றி மிக விரைவில் அல்லது 14 நாட்களுக்குள் தெரியப்படுத்தப்படும்.
- கேட்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்க தீர்மானிக்கும் பட்சத்தில் ஆணையகத்தால் நிர்ணயிக்கப்பட்ட குறிக்க தொகையினை செலுத்தும்படி தகவல் வழங்கப்படும். தகவல்களை பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டுமாயின் அதனடிப்படையிலும் அல்லது கட்டணம் செலுத்த தேவைப்படாவிடின் எந்தவொரு அறவீடும் இல்லாது 14 தினங்களுக்குள் தகவல்கள் பெற்றுத்தரப்படும்.
- கட்டணம் செலுத்தப்பட்டப் பின் 14 தினங்களுக்குள் தகவல்களை வழங்க முடியாதிருப்பின், தகவல் உத்தியோகத்தரினால் அதற்கான காலவரையறை நீடிக்கப்பட்டதற்கான காரணங்களை குறிப்பிட்டு 21 நாட்களுக்குள் உங்களால் கோரப்பட்ட தகவல்கள் பெற்றுத் தரப்படும்.
- தகவல் பெற்றுத்தருமாறு கோரப்பட்டிருக்கும் விண்ணப்பமானது ஒருவரின் வாழ்க்கை மற்றும் தனியாள் சுதந்திரத்தை பற்றியதாக காணப்படும் சந்தர்ப்பத்தில் அதற்கான பதிலானது கோரிக்கை முன்வைக்கப்பட்ட 48 மணித்தியாலங்களுக்குள் கிடைக்கப்பெறும்.
- உங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு ஏற்ப வழங்கப்பட்டிருக்கும் தகவல்கள் திருப்திகரமற்றதாக காணப்படின் (கிழ் காணும் முறையில்), 14 தினங்களுக்குள் கீழ் காணும் உத்தியோகத்தரிடம் மேன்முறையீடு ஒன்றை முன்வைக்கக் கூடியதாக இருக்கும் என்பதையும் தயவுசெய்து கவனத்திற்கொள்க.
- தகவல்களை பெறுவதற்காக விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுதல்.
- சட்டத்தின் 5 ஆம் பகுதியில் குறிப்பிட்டள்ளவாறு விலக்களிக்கப்பட்ட தகவல்களாக கருதும் பட்சத்தில் அத்தகவல்களை வழங்க மறுத்தல்.
- சட்டத்தினால் வரையறுக்கப்பட்ட காலப்பகுதி போதியதாக காணப்படாமை.
- முழுமையற்ற, பிழையான அல்லது முறையற்ற தகவல்களை வழங்குதல்.
- மேலதிக அறவீடுகளை மேற்கொள்ளல்.
- கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கும் வடிவமைப்பின் அடிப்படையில் தகவல்களை வழங்க தகவல் உத்தியோகத்தர் மறுப்புத் தெரிவித்தல்.
- அத்தகவல்களை அக்குடிமகன் அணுகுவதை தடுக்கும் பொருட்டு அவை சிதைக்கப்பட்டதாக, அழிக்கப்பட்டதாக அல்லது தவறான இடத்திலுள்ளதாக நியாயமான காரணங்களை முன்வைத்தல். එ
![]() |
பெயர் குறிப்பிடப்பட்ட உத்தியோகத்தர்
பிரதேச செயலாளர் (பதில் கடமைப் புரிபவர்)
திரு. பீ.எம்.பீ.எம்.ஏ. படுகெதர
045 226 5128
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
|
![]() |
தகவல் உத்தியோகத்தர்
உதவி பிரதேச செயலாளர்
திரு. பீ.டீ.எஸ். மதுஷங்க
045 226 5038
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
|
RTI 01 - தகவல்களை பெறுவதற்கான விண்ணப்பப்படிவம்
RTI 02 - கோரிக்கை கிடைக்கப்பெற்றதாக அறியத்தருதல்
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும்
RTI 03 - தகவல் கோரிக்கை பதிவு ஆவணம்
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும்
RTI RTI 04 -கோரிக்கை கிடைக்கப்பெற்றதாக அறியத்தருதல்
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும்
RTI 05 - தகவல் கோரிக்கை நிராகரிக்கப்படுதல்
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும்
RTI 06 - தகவல்கள் பெற்றுத்தரும் காலத்தை அதிகரித்தல்
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும்
RTI 07 - 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டம்
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும்
RTI 08 - தகவல் அறியும் கோரிக்கை மீதான மேன்முறையீடு பற்றிய அறிவித்தல்
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும்
RTI 09 - 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டம் - மேன்முறையீட்டு ஆவணம்
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும்
RTI 10 - பெயர் குறிப்பிடப்பட்ட உத்தியோகத்தரிற்கு அனுப்ப வேண்டிய மேன்முறையீட்டுப் படிவம்
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும்
RTI 11 - நிராகரிப்பு விபரங்கள் பற்றிய ஆவணம்
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும்
RTI 12 - பெயர் குறிப்பிடப்பட்ட உத்தியோகத்தர் மற்றும் தகவல் உத்தியோகத்தர் பற்றிய தகவல் அறிக்கை
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும்

















